Category Archives: Nayanmars

காரைக்கால் அம்மையார்

காரைக்கால் நகரும், வணிக குலமும் செய்த மாதவத்தின் பயனாகத் , தனதத்தன் என்பவரது மகளாகத் திருமகளுக்கு நிகரான பேரழகுடன், புனிதவதியார் தோன்றினார். இளமையில் மொழி பயிலும் காலத்திலிருந்தே சிவபிரானிடமும், சிவனடியார்களிடமும் பேரன்பு பூண்டு விளங்கினார். மணப் பருவம் வந்த தனது மகளுக்கேற்ற மணாளனுக்கு மணம் முடிக்கக் கருதிய தனதத்தன் , நாகப் பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி … Continue reading

Posted in Nayanmars | Leave a comment

நாயன்மார் சரித்திரம்-4

திருநின்ற சருக்கம்    திருநாவுக்கரசு  நாயனார் திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ் பெருநாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேருலகில் ஒரு நாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன். –பெரிய புராணம் பெண்ணை ஆற்றினால் வளம் கொழிக்கும் திருமுனைப்பாடி நாடு சைவ நெறியை நிலை நிறுத்திய திருநாவுக்கரசு நாயனாரும் சுந்தர … Continue reading

Posted in Nayanmars | Leave a comment

நாயன்மார் சரித்திரம்-3

நாயன்மார் சரித்திரம்- 3 (தொடர்ச்சி) மும்மையால் உலகாண்ட சருக்கம்    மூர்த்தி  நாயனார் பொதிகை மலையைக் கொண்டதும்,தாமிரபரணி ஆற்றினால் வளம் பெறுவதும், கொற்கைத்துறையில் முத்துக்கள் விளைவதும் ஆகிய சிறப்புக்களை உடையது பாண்டிய நாடு. திருமகள் வீற்றிருக்கும்  செந்தாமரை மலர் போல விளங்குவது அதன் தலைநகராகிய மதுரை ஆகும். முச்சங்கம் வளர்த்த இந்நகர், சங்கப்புலவர்களில் ஒருவராக இறைவனே … Continue reading

Posted in Nayanmars | Leave a comment

நாயன்மார் சரித்திரம்-2

எறிபத்த நாயனார் இமயத்தில் புலிக்கொடியை நாட்டிய கரிகால் பெருவளத்தான் முதல் அநபாய சோழன் வரை ஆட்சி செய்து வந்த சோழ மன்னர்கள் தமது தலைநகர்களாகக் காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், திருச்   சேய்ஞலூர், கருவூர்  ஆகிய நகரங்களைத் தலைநகர்களாகக் கொண்டு ஆண்டு வந்தனர். அழகு வாய்ந்த கருவூர் நகரின்கண் சிவ பெருமான் என்றும் நீங்காது அருள் வழங்கும் … Continue reading

Posted in Nayanmars | Leave a comment

அறுபத்துமூன்று நாயன்மார்கள்

                                                 பெரிய புராணம் – முன்னுரை சிவபெருமான் மீது கொண்ட ஆறாத அன்பு ஒன்றைக் கொண்டே செயற்கரிய செயல்களைச்  செய்த பெரியவர்களது சரிதத்தைச் … Continue reading

Posted in Latest News, Nayanmars | Leave a comment

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

வேதமும் சைவமும் தழைக்கவும், பிற சமயங்களின் பிடியிலிருந்து சைவ நெறியைக் காக்கவும் சீர்காழிப் பதியில் அந்தணர் மரபில் கவுணிய(கௌண்டின்ய)கோத்திரத்தில் அவதாரம் செய்தருளியவ்ர் திருஞான சம்பந்தர். சைவ சிகாமணி என்று போற்றப்பெறும் காழிப்பிள்ளயாரைத் தவம் செய்து பெற்றோர் சிவபாத இருதயரும் பகவதி அம்மையும் ஆவார்கள். மூன்றாண்டு ஆகியபோது தனது தந்தையுடன் ஆலயத்திற்குச் சென்றார்.அங்கிருந்த பிரமதீர்த்தத்தில் தந்தை மூழ்கி … Continue reading

Posted in Nayanmars | Leave a comment

திருநாவுக்கரசு நாயனார்

சைவ சமயாசார்யர்கள் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள் நீக்கியார் என்பதாகும். திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற தலத்தில் புகழனார்-மாதினியார் தம்பதியருக்கு மகவாகத் தோன்றியருளியவர். இவரது தமக்கையான திலகவதியாருக்கு கலிப்பகையார் என்பவரை மணம் பேசிய நிலையில், போர்முனையில் அக்கலிப்பகையார் வீர சுவர்க்கம் அடைந்தார்., தமது பெற்றோர்களும் இறையடி சேர்ந்ததால் மனம் நொந்த திலகவதியார் தாமும் உயிர் … Continue reading

Posted in Nayanmars | Leave a comment

அரிவாட்டாய நாயனார்

சோழ நாட்டில் திருத்துறைப்பூண்டிக்கு அண்மையில் உள்ள பாடல் பெற்ற தலமான தண்டலை நீள் நெறி ( தண்டலைச்சேரி)க்கு அருகாமையில் உள்ள கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குடியில் தோன்றியவர் தாயர் என்பவர். இவரும் இவரது மனைவியாரும் மிகுந்த அன்போடு சிவபெருமானது திருக்கோயிலுக்குத் தினந்தோறும் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நிவேதனத்திற்காக  வழங்கும் அரும்பணியைச் செய்து வந்தனர். … Continue reading

Posted in Nayanmars | Leave a comment

செருத்துணை நாயனார்

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள சன்னா நல்லூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பாதையில் உள்ள திருமருகலில் இருந்து திருச்செங்காட்டங்குடி வழியாகத் திருப்பயத்தங்குடி(திருப்பயற்றூர்) என்ற பாடல் பெற்ற தலத்திற்கு மிகவும் அண்மையில் உள்ள கீழத்தஞ்சை என்ற ஊரில் தோன்றியவர் செருத் துணை நாயனார். இவ்வூரை ” மருகல் நாட்டுத் தஞ்சாவூர் ” எனக் குறிப்பார் சேக்கிழார் பெருமான். இவர் … Continue reading

Posted in Nayanmars | Leave a comment

அதிபத்த நாயனார்

நாகப்பட்டினத்தில் பரதவர் குலம் விளங்கத் தோன்றியருளியவர் அதிபத்தர். நுளையர்பாடிக்குத் தலைவராக இருந்த இவர், சிவ பெருமானிடத்துப் பேரன்பு பூண்டு , தங்கள் குலத் தொழிலான மீன் பிடித்தலைச் செய்து வந்தபோது, வலையில் அகப்படும் மீன்களுள் ஒன்றை சிவனுக்கென்று கடலில் விட்டு விடுவதை நியமமாகக் கொண்டிருந்தார். நாயனாரது பேரன்பை உலகு அறியும் வண்ணம் இறைவர் செய்த திருவிளையாடலால், … Continue reading

Posted in Nayanmars | Leave a comment