Author Archives: ardhrafoundation
திருவையாற்றில் சப்த ஸ்தான விழா
தமிழகக் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில் சித்திரை மாதத்தில் திருவையாற்றில் நடைபெறும் சப்த ஸ்தான விழாவும் ஒன்றாகும். திருவையாறு உள்ளிட்ட ஏழு தலங்களின் பல்லக்குகள் ஒரு சேர பவனி வந்து காட்சி தரும் அற்புதக் காட்சியை வாழ்நாளில் ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டும். ஏழு ஊர் மக்களும் ஒருங்கிணைந்து நடத்தும் வைபவம் இது. … Continue reading
மயிலாடுதுறையில் கடைமுக உற்சவம்
” ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது ” என்று மயிலாடுதுறைக்காரர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இதைப் பொருள் அறிந்து எத்தனை பேர் சொல்கிறார்களோ தெரியவில்லை. மயூரம் என்ற வடசொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதலால் மயூரம் அல்லது மாயூரம் எனப்பட்டது. மயிலைக் காட்டிலும் அழகிய பறவையைக் காண்பது … Continue reading
திருச்செங்காட்டங்குடியில் அமுது படையல் உற்சவம்
திருச்செங்காட்டங்குடி என்ற பழமை வாய்ந்த சிவஸ்தலத்தில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பரணி நட்சத்திரத்தன்று அமுது படையல் என்ற வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தரிசிக்க அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் தொலைவிலுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். பிள்ளைக்கறி பிரசாதம் பெற்றுக்கொண்டு, விடியற்காலையில் ரிஷப வாகன தரிசனமும் செய்து கொண்டு, நிறைவான மனத்துடன் தமது ஊருக்குத் திரும்புகிறார்கள். … Continue reading
உருத்திர பசுபதி நாயனார்
“உருத்திர பசுபதிக்கும் அடியேன் ” என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப்பெற்றவர் தலையூர் என்ற தலத்தில் தோன்றிய ருத்திர பசுபதி நாயனார். தலையூர் என்ற பெயரில் இரண்டு இடங்களில் ஊர்கள் இருக்கின்றன. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் ஒன்றும், முசிறி வட்டத்தில் ஒன்றும் , ஆக இரு இடங்கள் … Continue reading
இயற்பகை நாயனார் சரித்திரம்
அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராக வைத்துப் போற்றப்படும் இயற்பகை நாயனாரது அவதாரத் தலம், பூம்புகாருக்கு அண்மையில் உள்ள திருச் சாய்க்காடு என்பது. இதனைச் சாயாவனம் என்றும் அழைப்பர். இங்குள்ள சிவாலயம் திருஞானசம்பந்தராலும்,திருநாவுக்கரசு சுவாமிகளாலும் பாடப்பெற்றது. சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்தை அடையலாம். இதற்கு மிக அண்மையில் பல்லவநீச்வரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. சாயாவனத்தில் … Continue reading
ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் (வாதவூரடிகள் ) சரித்திரம்
ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் (வாதவூரடிகள் ) சரித்திரம் மதுரையம்பதிக்கு அருகிலுள்ள திருவாதவூர் என்ற சிவத்தலத்தில் அமாத்திய அந்தணர் குலத்தில் சம்பு பாதாச்ருதர் – சிவஞானவதி என்ற புண்ணிய தம்பதிகளின் தவப்பயனாகத் திரு அவதாரம் செய்தருளியவர் மாணிக்கவாசகர். அவரது பிள்ளைப்பருவ நாமம் திருவாதவூரார் என்பது. இளம்வயதிலேயே, கலைஞானம் முற்றும் கைவரப்பெற்று , அரிமர்த்தன பாண்டியனது அமைச்சராகத் … Continue reading
திருமூலதேவ நாயனார் சரித்திரம்
திருமூலதேவ நாயனார் சரித்திரம் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான திருமூலரை , ” நம்பிரான் திருமூலன் ” என்று பரவுகிறார் சுந்தர மூர்த்தி நாயனார். … Continue reading
Transformation at Karupur
It is unbelievable but true. The scene we saw at Karupur, near Aduthurai, a year back has transformed completely. Lord Garbapureeswara whose sanctum was the only shrine left behind as the sub shrines of the age old Temple had … Continue reading
Ardhra Festival at Chidambaram
The ardhra festival at Chidambaram starts with Dwajarohanam on 27th Dec and ends on 05th Jan with the Ardhra Dharshanam. Continue reading
சுந்தரமூர்த்தி நாயனார் சரித்திரம்
சுந்தரமூர்த்தி நாயனார் சரித்திரம் திருக்கயிலாயத்தில் சிவபெருமானுடைய பிரதிபிம்பமாகத் தோன்றி ,இறைவனிடம் அணுக்கத் தொண்டராக இருந்த சுந்தரர், ஒருசமயம் யாவரும் நெருங்கவும் … Continue reading