பஞ்ச கவ்யம் ( Pancha Gavyam) என்பது பசுவிலிருந்து வந்த பால், தயிர், நெய், கோ மயம், கோ மூத்ரம் ஆகிய ஐந்து பொருள்களைக் கலந்து அதோடு தர்ப்பை இடப்பட்ட நீரையும் சேர்க்கப்பட்ட கலவையைக் குறிக்கும்.
காயத்ரி மந்திரம் சொல்லி கோ மூத்ரத்தையும் கந்தத் த்வாராம் என்ற மந்திரத்தால் கோ மயத்தையும், ஆப்யாஸ்வ மந்திரம் சொல்லி பசும் பாலையும், ததிக் ரா வண்ண என்ற ரிக்கால் பசும் தயிரையும் சுக்ரம ஸி என்ற மந்த்ரத்தால் பசு நெய்யையும் தேவஸ் யத்வா மந்ரத்தால் தர்பை சேர்க்கப்பட்ட நீரையும் ஒரே கிண்ணத்தில் கீழ்க்கண்ட அளவுப்படி சேர்க்க வேண்டும் :
கோமயாத த்விகுணம் மூத்ரம் மூத்ராத் ஸர் பி சதுர் குணம் I ததி பஞ்சகுணம் ப்ரோக்தம் ஷீ ரம் அஷ்ட குணம் ததா II
என்றபடி, கோமயத்தை( பசும் சாணியை) விட இரண்டு பங்கு கோ மூத்ரமும், அதைவிட நான்கு பங்கு பசு நெய்யும் , நெய்யைவிட ஐந்து பங்கு பசும் தயிரும, தயிரை விட எட்டு பங்கு பசும்பாலு ம் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு கலந்த பஞ்ச கவ்யம் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வது மிகுந்த புண்ணியம் தரும.
இதனை காலையில் வெறும் வயிற்றில் உட் கொண்டால் பாவ வினைகள் நீங்கி உடல் தூய்மை பெறலாம்.
நன்றி: வைதீக ஸ்ரீ ஜூன் 2020 இதழிலிருந்து.
காலை வணக்கம்.
பஞ்சகவ்யம் பற்றி மிகவும் நன்றாக அறிந்து கொண்டோம்.
கூஷ்மாண்ட ஹோம்ம் பற்றியும் அறிந்துகொள்ள ஆவல்.
பூஷணிக்காயை தானமாக பெறவும் கூடாது, தானமாக்க்
கொடுக்கவும் கூடாது என் சொல்வதன் காரணம் என்ன?
தயவு செய்து சொல்வீர்களா? நன்றி.
சேதுராமன்.
On Wed, 24 Jun 2020 at 7:23 PM, Ardhra Foundation wrote:
> ardhrafoundation posted: ” பஞ்ச கவ்யம் ( Pancha Gavyam) என்பது
> பசுவிலிருந்து வந்த பால், தயிர், நெய், கோ மயம், கோ மூத்ரம் ஆகிய ஐந்து
> பொருள்களைக் கலந்து அதோடு தர்ப்பை இடப்பட்ட நீரையும் சேர்க்கப்பட்ட கலவையைக்
> குறிக்கும். காயத்ரி மந்திரம் சொல்லி கோ மூத்ரத்தையும் கந்தத் த்வாராம் என”
>