சிவாலயங்களில் மகாகும்பாபிஷேகம் செய்வதற்கான விதிமுறைகளைச் சிவாகம வழியில் பின்பற்றி நடத்துவது அத்தியாவசியமாகும். இதற்குத் தேவையான பொருள்கள் பற்றிய விவரம் இங்கு தரப்பட்டுள்ளது. பொருள்களின் அளவு தேவைக்கேற்ப வேறுபடும். ஆகவே இங்கு தரப்பட்டுள்ள விவரம் பொதுவானது மட்டுமே. மேலும் விவரங்களைத் தங்களது சர்வசாதக சிவாசாரியார் மூலம் பெறலாம்.
பந்தக்கால் முகூர்த்தம் செய்யத் தேவையானவை:
மஞ்சள் தூள் குங்குமம்
விபூதி ; சந்தனம்
முகூர்த்தக்கால்( சுண்ணாம்பு, காவி அடித்தது) குத்துவிளக்கு ; குடம்; சொம்பு
ஆசன பலகை ; தாம்பாளம் ; கிண்ணம்.
கை மணி ; தூபக்கால்; தீபக்கால்;
தீபாராதனைத் தட்டு.
மாவிலை கொத்து தர்ப்பைக் கட்டு; முளைக் குச்சி கட்டு. நெல்; பச்சரிசி ; நுனிவாழை இலை. நவதான்யம் தேங்காய்; வாழைப்பழம்
பூமாலை; பூச்சரம் ; உதிரி பூ; வில்வம். வெற்றிலை,சீவல் நல்லெண்ணெய்,ஊதுபத்தி,சாம்பிராணி,திரிநூல்,தீப்பெட்டி கற்பூரம். சிவப்பு வண்ண ரவிக்கை துணி நைவைத்தியம் : சக்கரைப் பொங்கல்; பசும்பால்
மண் வெட்டி; கடப்பாரை; அரிவாள் ஆகிய உபகரணங்கள்.
மஹா கும்பாபிஷேக யாகசாலைக்குத் தேவையான பொருள்கள்:
மஞ்சள் தூள் குங்குமம் விபூதி சந்தனம் ஊதுபத்தி,சாம்பிராணி,திரிநூல்,தீப்பெட்டி கற்பூரம். நல்லெண்ணெய் ; தீப எண்ணை
பசுநெய் பசும்பால், பசும் தயிர்,கோஜலம் ,கோமேயம்
கங்கை ஜலம் முதலிய புண்ணிய தீர்த்தங்கள் அச்சு வெல்லம் நாட்டு சர்க்கரை அவல் ;பொட்டுகடலை
அரிசி மாவு திரவிய பொடி
தேன் பேரீச்சை (விதை நீக்கியது) டைமன் கல்கண்டு
திராக்ஷை முந்திரி
தட்டை பாக்கு ;சீவல்
கோதுமை காராமணி
முழு துவரை முழு பயறு கொண்டைக்கடலை
மொச்சை உளுந்து
எள்ளு ; கொள்ளு ;நெல்
பச்சரிசி ; தவிடு
நெல்பொரி (சுத்தமானது) வரகரிசி ( ஸ்தூபிக்குத் தேவையான அளவு)
முப்புரிநூல் கண்டு ; பஞ்சவர்ண நூல்: கரும் சிவப்பு; பச்சை;நீலம்;மஞ்சள்;வெளிர் சிவப்பு; சிவப்பு பட்டுக் கயிறு (கனமானது)
ஐந்து பிரி சணல் மூன்றுபிரி சணல்
பிளாஸ்டிக் குடம்;பிளாஸ்டிக் மக்;
சிறிய பை; பெரிய பை
நாட்டு மருந்து சாமான்கள்:
ஏலக்காய்; பச்சை கற்பூரம் கிராம்பு ஜாதிக்காய்
ஜாதி பத்திரி; சண்பக மொட்டு கஸ்தூரி மஞ்சள் ; குங்குமப்பூ விளாமிச்சை வேர் ; வெண் கடுகு சந்தனாதி தைலம்
ரோஸ் எசென்ஸ்; பன்னீர் காவி
சரகு;தொன்னை அஷ்டபந்தன மருந்து (தேவைக்கேற்ப) வெண்ணை
ஹோம சாமான்கள் :
பூலாங் கிழங்கு ; கோரைகிழங்கு
வலம்புரிக்காய்
இடம்புரிக்காய் ; கடுக்காய் ;மாசிக்காய் ; தான்றிக்காய்; ஜாதிக்காய் வெட்டிவேர் ; நன்னாரி வேர் தக்கோலம் ; வெண் கடுகு நெல்லிமுள்ளி
ஜடாமாஞ்சி ; அதிமதுரம் ; சுக்கு ; சித்தரத்தை வால்மிளகு ரோஜாமொட்டு சண்பக மொட்டு குங்கிலியம் ; மட்டிப்பால்
கண்டதிப்பிலி ;அரிசி திப்பிலி கஸ்தூரி மஞ்சள் ஜாதிபத்திரி பச்சைகற்பூரம் கிராம்பு; ஏலக்காய் கருங்காலி கஸ்தூரி கோரோசனை ; புனுகு
ஜவ்வாது ; அரகஜா
காய்-கனி வகைகள்:
இலைக்கட்டு
பூசணிக்காய்
தேங்காய் (அடர்த்தியான நாருடன் கூடியது)
நார் உரித்த தேங்காய்
முழு மட்டை தேங்காய்
காய்ந்த தென்னை மட்டை
இளநீர்
பூவன் வாழைப் பழம்
ரஸ்தாளி வாழைப் பழம் கற்பூரவல்லி வாழைப் பழம்
ஆப்பிள்; ஆரஞ்சு ; மாதுளை
கொய்யா
திராக்ஷை
நாரத்தை; எலுமிச்சை
வெற்றிலை
ஜவுளி வகைகள்:
9×5 வேஷ்டி 8 முழ வேஷ்டி & 4 முழ அங்கவஸ்திரம் 3 முழ அங்கவஸ்திரம் 4 முழ காசி துண்டு (சிவப்பு) 9 கஜம் காட்டன் புடவை 6 கஜம் காட்டன் புடவை 3 முழ துண்டு 80 cm கலசத் துணி பட்டுத் துணி மூர்த்தி வஸ்திரங்கள்: (தேவைக்கேற்ப) பணியாளர் வஸ்திரங்கள் ( தேவைக்கேற்ப)
ஒவ்வொரு கால பூஜைக்கும் நைவைத்தியம்
பூவகைகள்
பாளையுடன் கூடிய தென்னம் பூ
அனுக்ஞை, கணபதி பூஜை/ ஹோமம் ,நவக்ரஹ ஹோமம் ,தன பூஜைக்கு: ஒருமுழ மாலை( 15 ) ; 2 முழ கரவாரம்( 3); கொண்டை மாலை (3 ) செட் ; காது தோடு (3)செட் ; சரம்(25) முழம்; உதிரி பூ: (2) கிலோ.அருகம் புல்;வில்வம்,வன்னி,தாமரை ஆகியவை.
பிரவேச பலி;ரக்ஷோக்ன ஹோமம்;வாஸ்து சாந்தி ஆகியவற்றுக்கு: ஒரு முழமாலை( ) ஒன்றரை முழ மாலை ( ); 2 முழ கரவாரம்( 3); கொண்டை மாலை (3) செட்:காது தோடு: (1 )செட்; சரம்(25) முழம்; உதிரி பூ: (2) கிலோ.அருகம் புல்;வில்வம்,வன்னி,தாமரை,அரளி ஆகியவை.
பரிவார யாக சாலைக்கு: ஒரு முழ மாலை: (50); ஒருமுழ உள்ளாரம், ஒன்றரை முழ கரவாரம், கொண்டைமாலை, காது தோடு ஆகியன தலா 4 செட்.
ஒவ்வொரு கால சுவாமி-அம்பாள் யாக சாலைக்கும் தலா இரண்டுசெட் வேண்டியவை:
ஒன்றரை முழ கரவாரம்: 2 முழ கரவாரம்; கொண்டை மாலை,:காது தோடு:(2 )செட்;சரம்(150) முழம்; உதிரி பூ:(10)கிலோ.அருகம் புல்;வில்வம்,வன்னி,தாமரை,அரளி திருவாசி தட்டி(2) ஆகியவை.
கும்பாபிஷேகத்தன்று மாலை திருக்கல்யாணத்திற்குத் தேவையானவை:
ஒன்றரை முழ கரவாரம்: 2 முழ கரவாரம்; கொண்டை மாலை,:காது தோடு:(2 )செட்;சரம்(25) முழம்; உதிரி பூ:(10)கிலோ.;வில்வம்,வன்னி,தாமரை,அரளி திருவாசி தட்டி(2),3 முழ பணி செட்,மாற்று மாலை(4) ஆகியவை.
மண் பாண்டங்கள்:
15 லிட்டர் பானை:
2 லிட்டர் வாணை /மடக்கு : 4
1½ லிட்டர் கலயம்: 300
½ லிட்டர் மடக்கு( விளிம்புடன்): 20
பெரிய அகல் : 20
புதிய உலோக சாமான்கள்:
8 லிட்டர் பித்தளை குடம் (8)
ஒரு லிட்டர் பித்தளை சொம்பு: ( 30)
பிற உலோக சாமான்கள்:
8 லிட்டர் குடம்: 3
6 லிட்டர் குடம்: 30
சொம்பு : 20
கைமணி : 2
குத்து விளக்கு : 6
தீபாராதனை தட்டு : 2
பெரிய தாம்பாளம் : 5
தூபக்கால் : 2
தீபக்கால் : 2
அலங்கார தீபம் : 2
பூர்ணகும்ப தீபம் : 2
பஞ்ச ஹாரத் தட்டு : 2sets
சோடசோபசாரம் : 2 sets
கற்பூர கிளை : 2
***********
வெள்ளி தகடு ,வெள்ளி கம்பி; வெள்ளி காப்பு. நவமணிகள்
*************
இதர சாமான்கள்:
ஆசன பலகை: 25 அஷ்டமங்கல பலகை 36 ஸ்ருக்கு; ஸ்ருவம் : தலா 14 பெரிய மூங்கில் தட்டு: 15 சிறிய மூங்கில் தட்டு: 10 மூங்கில் கூடை: 2 விசிறி: 15 மாவிலை: தர்ப்பைக் கட்டு ;தர்ப்பைக் கயிறு ஆல்,அரசு,மா,வன்னி,வில்வம் சமித்துகள் கனமான மரக்கட்டைகள் (ஒரு முழ நீளத்துடன்)
கத்தி,அரிவாள் மனை, அரிவாள்
யாக சாலை கொட்டகை யாக சாலை சாமான்களைப் பாதுகாப்பாக வைக்கும் இடம் வேதிகை ;ஹோமகுண்டம் யாக சாலை அலங்காரங்கள் மங்கள வாத்தியம் (நாதஸ்வரம்) வேத- திருமுறை பாராயணங்கள் உபசார குடை 2 தீவட்டி 2 சில்லரை தக்ஷிணை சிவாசார்யர் சம்பாவனை :
மண்டலாபிஷேகத்திற்குத் தேவையான பொருள்கள் (ஒவ்வொரு நாளும்): நல்லெண்ணெய்,பசும்பால்,அர்ச்சனை சாமான்கள்,புஷ்பம் ஆகியவை.
அருமையான உபயோகமான தகவல்கள்
ஆதரவுக்கு நன்றி
மிக மிக சிறப்பான தகவல்கள் நன்றி
மிக்க நன்றி