பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நித்திய பூஜைகளும் விழாக்களும் முறைப்படி நடத்துவதாகும். இதற்காக ஒவ்வொரு கோவிலிலும் ஒரு வைப்பு நிதி அமைக்கப்படுதல் அவசியம்.
கிராமக்கோயில்களில் உள்ள சிப்பந்திகள் மிகக் குறைந்த சம்பளமே பெறுகிறார்கள். ஊராரும், அரசாங்கமும் இதற்கு ஆவன செய்ய வேண்டும்.
நிலங்களிலிருந்து வருமானம் மிகக் குறைந்துவிட்ட இக்காலத்தில் வெளி ஊர் அன்பர்களின் ஆதரவால் மட்டுமே திருப்பணிகளைச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சொந்த ஊரை விட்டு விட்டு, நகரங்களில் குடியேறியவர்கள்,தங்கள் ஊர் ஆலய வளர்ச்சிக்கு உதவ முன்வரவேண்டும்.
தங்களது மாத வருமானத்தில் ஒரு சிறு பகுதியையாவது சிவாலயத் திருப்பணிக்கு அளிக்கவேண்டும்.
இல்லங்களில் சுப காரியங்கள் நடைபெறும்போது, அதற்காகும் செலவில் ஒரு சிறு பகுதியை சிவாலய நித்திய பூஜைக்கு அளிக்கலாம்.
நகரங்களில் உள்ள அன்பர்கள் அருகிலுள்ள கிராமக் கோயில்களுக்குச் சென்று எண்ணை, புஷ்பம் ஆகியன அளிப்பதோடு, அர்ச்சகருக்கு இயன்ற அளவு சம்பாவனை வழங்க வேண்டும்.
ஆலய வழிபாடுகளில் சிறுவர்களை ஈடுபடுத்தி நல்வழி காட்ட வேண்டும்.
ஊர் தோறும் நித்திய வழிபாட்டுக் குழுக்கள் அமைக்கப் படவேண்டும்.
நின்றுபோன திருவிழாக்களை மீண்டும் துவக்க வேண்டும்.
This entry was posted in News. Bookmark the permalink.